வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ் | EPS

x

மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப்பட்டியலில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவன் முருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது அதிமுக சார்பில் மாணவன் முருகனுக்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலையை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்