அரசு பஸ் கண்டக்டரை அடித்த இளைஞர்.. புரூஸ்லீயாக மாறி கிக் விட்ட டிரைவர் - பரபரப்பு காட்சிகள்

x

சிதம்பரம் அருகே இளைஞர் ஒருவரும், அரசு பேருந்து ஓட்டுநரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அந்த பேருந்து சென்ற போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மதுபோதையில் வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநருக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், நடத்துநரும், ஓட்டுநரும் சேர்ந்து அந்த இளைஞருடன் மோதிக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்