சாக்கடையுடன் போடப்பட்ட காங்கிரீட் "தேவையின்றி செய்தி வெளியிட்டால்.."செய்தியாளருக்கு மிரட்டல்...

x

கரூரில், கழிவுநீர் வாய்க்கால் கட்டுமானப் பணியின்போது, கழிவுநீரை முழுமையாக அகற்றாமல், காங்கிரீட் கலவையை பணியாளர்கள் கொட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. அதைத்தொடர்ந்து மாநகர மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, செய்தியாளர்களுக்கு நேற்று விளக்கம் கொடுத்தனர். பொதுமக்கள் சிலரும் பேட்டியளித்தனர். அப்போது, திமுக மாவட்ட பிரதிநிதி மாரப்பன் என்பவர், செய்தியாளர்களை தடுத்து நிறுத்தியதுடன், தேவையில்லாமல் செய்தி வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று மிரட்டலும் விடுத்தார். இதனால், அவருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்