ஆயுள் தண்டனை கைதிகளுக்கு - கேரள அரசு அளித்த சலுகை | Kerala | Government

அரசியல் கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு, சிறப்பு சலுகை வழங்கி கேரள உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, தண்டனை காலத்தை பொறுத்து 15 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை தண்டனை குறைக்கப்படும்.

கேரள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகளை துன்புறுத்துதல், வகுப்புவாத கலவரம், போதைப் பொருள் கடத்தல் ஆகிய வழக்குகளுக்கு இந்த சிறப்பு உத்தரவு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com