"பணம், பரிசுகளால் கட்டாய மதமாற்றம்".. மத்திய அரசு பதில் மனு தாக்கல்

கட்டாய மத மாற்றத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
x

இது குறித்து பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்தியா தொடர்ந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி எம். ஆர். ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், பணம், பரிசுப் பொருட்கள் தந்து, பிறரை மத மாற்றம் செய்வது மத சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையில் வராது என கூறப்பட்டுள்ளது. கட்டாய மத மாற்ற பிரச்சனை அதன் தீவிரத்தை, மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் உள்ளிட்ட நலிந்தோரின் உரிமைகளை பாதுகாக்க கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றத்தை தடுக்க ரிட் மனுவில் தெரிவித்துள்ள கோரிக்கைகளை தீவிரமாக கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்