எக்ஸ்பைரி ஆன மதுவை குடிப்பதாக புகார் - உடனே ஆக்சனில் இறங்கிய போலீசார் - திருவள்ளூர் அருகே பரபரப்பு

x

10 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கள்ள மதுபான கூடத்தில் உள்ள காலாவதியான மதுவை பொதுமக்கள் குடிப்பதாக புகார் எழுந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலால் உதவி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் வரதாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த கள்ள மதுபான ஆலைக்கு 10 ஆண்டுகளுக்கு முன் போலீசார் சீல் வைத்தனர். மேலும் மதுபானம் தயாரித்த ஜெகநாதன் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கள்ளமதுபான ஆலையின் மேற்கூரையை உடைத்து சுற்றியுள்ள கிராமத்தினர் காலாவதியான மது பாட்டில்களை எடுத்து குடித்து வருவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் கள்ள மதுபான கூடத்தின் மதில் மீது ஏறி குதித்து ஆய்வு செய்தார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையர் மாலதி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த காலாவதியான மது பாட்டில்கள் அப்புறப்படுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்