பெண் கொடுத்த வரதட்சணை புகார் - சிக்கலில் கணவர், காவல் ஆய்வாளர்

x

மயிலாடுதுறையில் இளம்பெண்ணை தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்த அபிராமி என்பவர், தனது கணவர் வினோத் குமார், நாகை காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர், வரதட்சணை கேட்டு தாக்கியதாக, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்