பிரசவத்தின்போது பிறந்த குழந்தையின் இடது கையை மருத்துவமனை உடைத்தததாக புகார்.. தாயார் கதறல்

x

செங்கல்பட்டு மாவட்டம் கொடூர் பகுதியை சேர்ந்த துரை என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ கர்ப்பமடைந்து, கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், ஜெயஸ்ரீக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு, கடந்த செவ்வாய்கிழமை சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது குழந்தையின் இடது கை உடைக்கப்பட்டு இருப்பதாகவும், வலது கை செயலிழந்த நிலையில் காணப்படுவதாகவும், உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும், 3 நாட்களாக தொடர்ந்து தலையில் இருந்து ரத்தம் வெளியேறி வருவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தும், சரியான பதில் அளிக்கவில்லை என குற்றம் சாட்டினர். இதுகுறித்து மருத்துவமனை நிலைய அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தவறு செய்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்