ரூ.2 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக புகார் - போக்குவரத்து துணை ஆணையர் வீட்டில் சோதனை

x

போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வருபவர் அழகரசு. இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னதாக திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக 2 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக புகார் வந்தன. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள அழகரசு வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பணியில் இருந்த போது அவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா? லஞ்சமாக ஏதும் பண பெற்றுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் ஆவணங்கள் கிடைத்துள்ளதா? என்பது குறித்து சோதனை முடிவில் தெரியவரும்...


Next Story

மேலும் செய்திகள்