"ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார்" - போக்குவரத்து துறை உத்தரவு

x

மாணவர்கள் பாதுகாப்பான விதிகளை பின்பற்றச் செய்வதற்கான நிலையான இயக்க நெறிமுறைகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வதாக போக்குவரத்து துறை குறிப்பிட்டுள்ளது. மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ பேருந்தை நிறுத்தி, முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், அதையும் மீறி மாணவர்கள் அவ்வாறு பயணம் செய்தால் காவல் நிலையத்துக்கோ, அவசர அழைப்பு எண்ணான 100 அல்லது மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கோ புகாரளிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்