"யார்கிட்ட வேணும்னாலும் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ" - நடுரோட்டில் பெண் கவுன்சிலர் அட்ராசிட்டி

x

கோவையில் திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் பொது மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டின் முன் இருந்த மரக்கன்றுகளை சேதப்படுத்தும் வீடியோ பரவி வருகிறது.

கோவை மாநகராட்சியின் 34 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருபவர் திமுகவை சார்ந்த மாலதி.

இவர் வசித்து வரும் பகுதியில் சுபாஷ் என்பவர் அவருடைய வீட்டின் முன்பு வேப்ப மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், மாலதி அவரிடம் சென்று தன்னுடைய காரை நிறுத்தும் இடத்தில் நட்டு வைத்துள்ள மரக்கன்றை அப்புறப்படுத்துமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவாறே அந்த மரக்கன்றுகளை முறித்து தகராறு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்