"ஆளுங்கட்சி நான்... கழுத்த அறுத்திடுவேன்" - கம்யூ. உறுப்பினருக்கு திமுக கவுன்சிலரின் கணவர் கொலைமிரட்டல்... வெளியான பகீர் ஆடியோ

x

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, மதுபான பார் நடத்துவது தொடர்பாக புகார் அளித்ததால், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக ஊராட்சி உறுப்பினரின் கணவர் மீது, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார். சந்திரன் என்பவர், மதுக்கூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபான பார் குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்துள்ளார். இதுதொடர்பாக மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்ற திமுக உறுப்பினர் அன்புச்செல்வியின் கணவர் விஜயகுமார் என்பவர், சந்திரனை போன் செய்து மிரட்டியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்