காமன்வெல்த் - மகளிர் டி20 இறுதிப் போட்டி.. கடைசி நிமிடம் வரை போராடிய இந்தியா

x

காமன்வெல்த் மகளிர் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்த‌து.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும், பின்னர், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த‌து. இதனால், 19 புள்ளி 3வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்த‌து.

இதன்மூலம், 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தியது. இரண்டாம் இடம் பிடித்த இந்தியா வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.


Next Story

மேலும் செய்திகள்