தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்... சீமான் மாலை அணிவித்து மரியாதை

x

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வீர வணக்கம் முழக்கங்களை எழுப்பினர். இதேபோல், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாமக சார்பில் அமைப்புச் செயலாளர் ஜெயராமன், தேமுதிக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி உள்ளிட்டோரும் சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்