காமெடி நடிகர்கள் குரலில் பேசி விழிப்புணர்வு பிரச்சாரம் - வியந்து பார்த்த மாணவர்கள்

x

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் நகைச்சுவை நடிகர்களின் குரல்களில் அசத்தலாக பேசி "எண்ணும் எழுத்தும்" திட்டம் பற்றி கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்... ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கான கற்றலை கொண்டாடுவோம் என்ற வகையில் "என் மேடை" என்ற வாகன பரப்புரை நடைபெற்றது... மாணவ-மாணவிகள் பயமில்லாமல் வாசிப்பு திறனை வெளிப்படுத்தும் நோக்கில் இது அமையப் பெற்றது... தொடர்ந்து கலைக்குழுவினர் நகைச்சுவை நடிகர்கள் குரல்களில் மிமிக்ரி செய்து கற்றலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்