40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து - மாணவர் உயிரை பறித்த சோகம்

x

கேரள மாநிலம் இடுக்கி அருகே, சாலை வளைவில் திரும்பும்போது 40 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 39 கல்லூரி மாணவர்கள் உட்பட 42 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஒரு கல்லூரி மாணவர் உயிரிழந்தார். காயமடைந்த ஒரு மாணவர் கவலைக்கிடமான நிலையில் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்கள் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்