"ப்பா.. என்னா ஸ்பீடு.. வேற லெவல்" மனு அளித்த தினத்திலேயே வீடு ஒதுக்கீடு அற்புதம் நிகழ்த்திய கலெக்டர்

x

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்த அன்றைய தினத்திலேயே, வீடு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இதில், தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயலிழந்த நபர் ஒருவர், இலவச வீட்டுமனை கோரி மனு அளித்தார்.

மனுவின் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மனு வழங்கிய தினத்திலேயே வீடு ஒதுக்கீடு செய்து ஆணையை வழங்கினார். மேலும், இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 549 ரூபாய் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்