"அந்த மனசு தான் சார் கடவுள்" மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய கலெக்டர் - நெகிழ்ச்சி சம்பவம்

x

நாகை மாவட்டம், புஷ்பவனம் கிராமத்தில் மாற்றுத்திறனாளி பற்றிய தகவல் கிடைத்ததும் நேரில் சென்று உதவிய மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த கிராமத்தில் நாகவள்ளி என்ற மூதாட்டி, மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத்திறனாளி மகன் பாலசுப்பிரமணியனுடன் குடிசை வீட்டில் வறுமையில் தவித்து வருகிறார். இவர்களைப் பற்றிய தகவல் கிடைத்ததும், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், அவர்களுக்கு இலவச வீடு, மருத்துவ உதவிகள், மாதாந்திர உதவித்தொகை கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் மூதாட்டியின் வீட்டுக்கே சென்று சக்கர நாற்காலி, படுக்கை, ஊன்றுகோல்கள் உள்ளிட்ட உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார். அவருடைய இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்