அரசு பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு குழுவுடன் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

x

புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப்பள்ளியில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகள் அமர்வதற்கான இடங்கள் மற்றும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் பார்வையிட்டார். ஆய்வின்போது உடனிருந்த மாவட்ட ஆட்சியர், இப்பள்ளியில் உடனடியாக மொபைல் டாய்லெட் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், அரசு சிறார் கூர்நோக்கு மையங்களில் உள்ள சிறுவர்கள் மன அழுத்தம் காரணமாகவே அங்கிருந்து தப்பித்துச் செல்வதாகவும், எனவே கூடுதல் ஆலோசகர்களை நியமித்து மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்