FASTag -ஆல் எகிறிய சுங்க கட்டண வசூல்

x

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில், தனியார்

நிறுவனங்களினால் கட்டமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எளிமைப்படுத்த, 2021 பிப்ரவரி முதல்

வாகனங்களில் FASTag அட்டை பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் FASTag அட்டை மூலம் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 770இல் இருந்து ஆயிரத்து 228ஆக உயர்ந்தது. இவற்றில் 339 சுங்கச் சாவடிகள்

மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளன. FASTag அட்டை மூலமான தினசரி சுங்கக் கட்டண வசூல், ஏப்ரல் 29இல் 193 கோடி ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அன்று FASTag அட்டை மூலம் 1.16 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. நாடு முழுவதும் தற்போது 6.9 கோடி FASTag அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுங்கச் சாவடிகளில்

காத்திருக்க வேண்டிய நேரம் வெகுவாக குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்