கோவையில் பயணியை பாதி வழியில் இறக்கி விட்ட தனியார் பேருந்து - பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்

x
  • கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு என்பவர், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் உக்கடத்திலிருந்து காளப்பட்டி செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறினார்.
  • காளப்பட்டிக்கு பயணச் சீட்டு கேட்ட போது, சரவணம்பட்டி வரை மட்டுமே பேருந்து செல்லும் என, ஓட்டுநர் கூறியதாக தெரிகிறது.
  • இது குறித்து ஓட்டுநரிடம் லோகு முறையிட்ட போது, காளப்பட்டி வரை செல்ல அனுமதி பெற்ற போதிலும், சரவணம்பட்டி வரை மட்டுமே பேருந்து இயக்கப்படுவதாக கூறி பயணிகளை இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
  • இது தொடர்பாக, கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், லோகு வழக்கு தொடர்ந்தார்.
  • இதை விசாரித்த ஆணையம், தனியார் பேருந்து உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Next Story

மேலும் செய்திகள்