வாயில் காயத்தோடு தவித்த யானை உயிரிழப்பு... பிரேத பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

• கோவை காரமடை அருகே வாயில் காயமடைந்து சாப்பிட முடியாமல் தவித்த காட்டு யானை உயிரிழந்தது. • கோவை மாவட்டம் காரமடை அருகே, வாயில் காயத்துடன் உடல் மெலிந்த நிலையில் காட்டு யானை சுற்றித் திரிந்தது. • அது விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த நிலையில், கும்கி யானை உதவியுடன் காட்டு யானை மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது. • வாயில் காயம் அதிகமாக இருந்ததால், டாப்சிலிப் முகாமில் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. • இதையடுத்து யானைக்கு நேற்று பிரேத பரிசோதனை நடந்த நிலையில், வெடி மருந்தினை உட்கொண்டதால், அது வெடித்து யானையின் தாடை மற்றும் பற்கள் சேதமடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. • இதனால் யானை உணவு உட்கொள்ள முடியாமல் உடல் பலவீனம் அடைந்து இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com