கோவை சம்பவம்.. கைதான 6 பேரும் புழல் சிறைக்கு மாற்றம்

x

முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் தேசிய புலனாய்வு போலீசார் 6 பேரையும் கோவை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது மத்திய சிறை நுழைவாயிலில் கூடியிருந்த அவர்களது பெற்றோர்களும் உறவினர்களும் பேச முற்பட்ட நிலையில், வாகனம் சற்று வேகமாக சென்றதால் பேச முடியாமல் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.

இந்த சதி திட்டத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இன்று மனு அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்