கோவையில் கொரோனா பாதித்த பெண் உயிரிழப்பு - அச்சத்தில் நோயாளிகள்

x
  • கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், கடந்த 17ஆம் தேதி உடல் நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்த அவருக்கு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்த‌து.
  • இதனால், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டபோது, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
  • இந்நிலையில் காலை 7.15 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
  • அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, உடனடியாக எரியூட்டப்பட்டது.
  • கொரோனா பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்திருப்பது, மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்