கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்... நெல்லை இஸ்லாமிய மத குருவிடம் - போலீசார் திடீர் விசாரணை

x

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்... நெல்லை இஸ்லாமிய மத குருவிடம் - போலீசார் திடீர் விசாரணை


கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் இஸ்லாமிய மத குருவிடம் காவல்துறையினர் மூன்று மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாக நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இஸ்லாமிய பிரசார பேரவை மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர் மண்பையிடம் நெல்லை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து தற்போது நெல்லை மாநகரம் மேலப்பாளையம் ஏகே கார்டன் பகுதியில் வசித்து வரும் முகமது உசேன் மண்பை என்பவரிடம் ஆய்வாளர் ரவீந்திரன் ஜேம்சன் ஜெபராஜ் ஆகியோர் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதை ஒட்டி அந்த பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே ​நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு பிரிவு காவல்துறை நிபுணர்கள் திடீர் சோதனை நடத்தினர். பேருந்து நிலையத்தில் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்தத்தில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த இருசக்கர வாகனங்களில் மர்ம பொருட்களை ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து வெடிகுண்டு கண்டறியும் கருவியை கொண்டு சோதனை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்