கோவை கார் குண்டுவெடிப்பு..திடீரென களமிறங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள்.தீவிரவாத அமைப்புடன் தொடர்பு காரணமா?

x

கோவை கார் குண்டுவெடிப்பு.. திடீரென களமிறங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள்...தீவிரவாத அமைப்புடன் தொடர்பு காரணமா?

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, மூன்று மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.கோவை கோட்டைமேடு பகுதியில், கடந்த ஆண்டு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தேசிய புலானாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில், 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றதாக, முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சென்னையிலும் மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்