"கோவை கார் வெடிப்பில் இறந்தவர் இடத்தில் ஜிகாத் புத்தகங்கள் பறிமுதல்" - NIA-வின் புதிய தகவல்

x

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் என் ஐ ஏ வின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கையில், கார் சிலிண்டர் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமோசா முபினின் வீட்டிலிருந்து பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், அலுமினியம் பவுடர், ரெட் பாஸ்பரஸ், சல்ஃபர் உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜிஹாத் குறித்த புத்தகங்களையும் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை அதிகாரியாக என் ஐ ஏ வின் காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வழக்கானது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்