25 குட்டிகளுடன் குடியிருப்பு பகுதியில் திரிந்த நாகப்பாம்பு - 4 மணி நேர தேடுதலுக்கு பின் சிக்கியது

x

கேரள மாநிலம் பாலக்கரையில், குடியிருப்பு பகுதியில் பாம்பு நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ், அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். சுமார் 4 மணி நேர தேடுதலுக்கு பின் அப்பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தில் நாகப்பாம்பை கண்டுபிடித்தார். அதனுடன் சுமார் 25 நாகப்பாம்பு குட்டிகளையும் அவர் மீட்டார். இதையடுத்து மீட்கபட்ட நாகப்பாம்பு மற்றும் குட்டிகள் பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்