பட்டாசு தீப்பொறியால் தீ விபத்து - தீப்பற்றி எரிந்த கோச்சிங் சென்டர்

x

பட்டாசு தீப்பொறியால் தீ விபத்து - தீப்பற்றி எரிந்த கோச்சிங் சென்டர்

புதுச்சேரி அருகே பட்டாசு தீப்பொறியால் ஏற்பட்ட தீ விபத்தில் கோச்சிங் சென்டர் எரிந்து நாசமடைந்தது. புதுச்சேரி அருகே வில்லியனூர் பகுதியில் வீட்டின் இரண்டாம் தளத்தின் மாடியில் கூரை கொட்டகையில் தனியார் கோச்சிங் சென்டர் இயங்கி வந்தது. தீபாவளியை முன்னிட்டு நேற்று இரவு அப்பகுதியில் வெடித்த பட்டாசு தீப்பொறி விழுந்ததில், கோச்சிங் சென்டர் கொட்டகை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த வில்லியனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கோச்சிங் சென்டர் முழுவதும் எரிந்து நாசமானது.


Next Story

மேலும் செய்திகள்