"இனிமே நம்பர்.1 இடத்துக்காக போராடுவோம்"... "பெண்களை வீட்ல முடக்க முடியாது" - தனியார் பள்ளி நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

x
  • தரமான கல்வி வழங்குவதில் இந்திய அளவில் 2வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டை முதலிடத்திற்குக் கொண்டுவரும் முயற்சியில் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

  • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தனியார் பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
  • அங்கு உரையாற்றிய அவர், கள்ளம் கபடம் இல்லாத பள்ளிக் குழந்தைகளின் முகத்தைக் காண்பதில் இருக்கக்கூடிய உற்சாகத்தை பார்க்கிறபோது அதைவிட வேறு மகிழ்ச்சி வேறு எதுவும் இருந்துவிட முடியாது என்று பூரித்தார்.
  • மேலும், பெண் கல்வியை ஆணித்தரமாக வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின், நாட்டிலேயே தரமான கல்வியை வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்