முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்

x

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தனி விமானம் மூலம் இன்று காலை சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்கிறார்.

அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக திருச்சி செல்லும் முதல்வருக்கு, திமுக சார்பில் வழி நெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் செல்லும் அவர், 655 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 ஆயிரத்து 639 புதிய திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

மேலும் 308 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 ஆயிரத்து 951 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின், 79 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் மீண்டும் தனி விமான மூலம் சென்னை திரும்புகிறார்.


Next Story

மேலும் செய்திகள்