"சட்டம் இயற்ற உரிமை இல்லாத மாநிலத்திலா அவர் ஆளுநராக உள்ளார்?" - ஆளுநர் மீது முதல்வர் கடும் விமர்சனம்

x
  • திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் கொண்டு செல்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐ.யூ.எம்.எல். மாநாட்டில் சூளுரைத்துள்ளார்.
  • சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75-ஆவது ஆண்டு பவள விழா மாநாடு நடைபெற்றது.
  • மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
  • முதல்வருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் பிரம்மாண்ட பேனா நினைவு பரிசு வழங்கப்பட்டது.
  • தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சாதாரண சட்டம் இயற்றக்கூட உரிமை இல்லாத மாநிலத்திற்குத்தான் ஆளுநராக உள்ளாரா என ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்தார்.
  • மேலும் 2024 நாடாளுமன்றத்தில் அனைத்திற்கும் முடிவு கட்டவும், திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் கொண்டு செல்லவும் ஒன்றிணைவோம் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்