மூடப்பட்ட ரேஷன் கடைகள்..புதுச்சேரி முதல்வர் வீட்டின் முன் போராட்டம் - பெரும் பரபரப்பு

x

புதுச்சேரியில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்க கோரி, ரேஷன் கடை ஊழியர்கள் முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... புதுச்சேரியில் ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு பதிலாக, பயனாளிகளின் வங்கி கணக்கில் பணமாக செலுத்தப்பட்டு வருவதால் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறக்க கோரியும், நிலுவையில் உள்ள 55 மாத ஊதியத்தை வழங்கக் கோரியும், 100க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, கோரிக்கையை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படுவதாக கூறினார். இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்திய நிலையில், புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்