கைமீறி போன காலநிலை மாற்றம்... இயற்கை பதம் பார்த்த முதல் 10 நாடுகள் - இந்தியாவுக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி

x

காலம் கடந்து சிந்திக்கிறோம் கால நிலை மாற்றம் பற்றி... கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்பதைப் போல், எல்லாம் கைமீறி போன சூழலில் தான் கால நிலை மாற்றம் என்றால் என்ன என்பதையே சிந்திக்கிறோம்... அந்த வகையில், பருவநிலை மாற்றத்தால் பொறுமை இழந்த மழை பதம் பார்த்த முதல் 10 நாடுகளின் பட்டியலை இங்கு பார்க்கலாம்...

கரீபியன் தீவுக்கூட்டங்களில் ஒன்றான Puerto Rico-ற்கு 2017, செப்டம்பர் 20ம் தேதி மரியா சூறாவளி மரண பயம் காட்டியது... கடந்த 1 நூற்றாண்டில் அத்தீவை சூறையாடிய மிகவும் சக்தி வாய்ந்த மரியா புயலால் 2 ஆயிரத்து 975 பேர் மாண்டு போயினர்...

கடந்த மே மாத கோடையை மழையில் மூழ்கடித்த மோக்கா புயல், மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் கரையைக் கடந்தது... 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்... பல லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் வங்கதேச தென்கிழக்கு எல்லை மாவட்டமான காக்ஸ் பஜார் மிக மோசமாக பாதிக்கப்பட்டது... இருநாடுகளிலும் 145 பேரின் உயிரைக் குடித்தது இந்த மோக்கா புயல்...

இந்த ஜூன் மாத துவக்கத்தில் ஹைதி நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 45 பேர் மடிந்து போனதுடன், ஏராளமானோர் மாயமாகினர்... மேலும் 13 ஆயிரத்து 600 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின...

வெப்பமண்டல புயல் நல்கேவால் கடந்த ஆண்டு அக்டோபரில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியானதுடன், 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்...

இந்த ஆண்டு மார்ச்சில் 5 வாரங்களுக்கும் மேலாக தெற்கு இந்தியப் பெருங்கடலைக் கடந்து, மொசாம்பிக், மடகாஸ்கர் மற்றும் மலாவி உள்ளிட்ட பல நாடுகளைத் தாக்கிய கொடிய ஃப்ரெடி சூறாவளியால் மலாவியில் மட்டும் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்...

செப்டம்பர் 2, 2019ல் டோரியன் சூறாவளியால் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த தீவு நாடுகளுள் ஒன்றான பஹாமாஸ் விழிபிதுங்கி நின்றது... 74 பேர் இச்சூறாவளிக்கு உயிரைப் பறிகொடுத்தனர்...

தொடர் பருவமழை, மற்றும் உருகும் பனிப்பாறைகளால் பாகிஸ்தானில் பல மாதங்களாக பேரழிவு நீடித்தது... 2022 செப்டம்பர், அக்டோபரில் கிட்டத்தட்ட 3 கோடியே 30 லட்சம் பேர் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருந்தனர்... வீடுகள், சாலைகள், ரயில் பாதைகள், பாலங்கள் மழையால் துடைத்தெறியப்பட்டன... சுமார் 40 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகின... 1739 பேர் பரிதாபமாக பலியாகினர்...

2020 அக்டோபரில் தாய்லாந்து நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட உடைப்பினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வடகிழக்கு நகோன் ரட்சசிமா மாகாணத்தில் உள்ள வீடுகள் மற்றும் வயல்வெளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர்...

2020ல் நேபாளத்தில் பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 132 பேர் கொல்லப்பட்டனர்... மேலும் லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்...


Next Story

மேலும் செய்திகள்