இந்தியாவை மிரட்ட வரும் வெப்ப அலை... அலட்சியமாக இருந்தால் ஆபத்து நேரலாம் - எதையெல்லாம் செய்ய கூடாது?

x
  • கோடை காலம் என்றாலே... அப்பப்பா முடியலப்பா என வேக வைக்கும் வெப்பம்...
  • இந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளாகவே வெப்பம் அதிகரிக்க, இவ்வாண்டு வெப்ப அலை உக்ரமாக இருக்கும் என எச்சரிக்கை தொடர்ந்து விடப்படுகிறது.
  • பிப்ரவரியிலேயே குஜராத் மற்றும் ராஜஸ்தானில் பல இடங்களில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியசை தொட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் சூழலில், இதற்கு பின்னணி காரணம் என்ன...? என கேட்டப்போது காலநிலை மாற்றம் என்கிறார் விஞ்ஞானி சந்திரசேகர்...
  • இதற்கிடையே வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து கண்காணிக்க மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநிலங்களுக்கு கடிதம் எழுதியிருக்கும் மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண், இனி அன்றாடம் வெயில் சம்பந்தமான நோய்களை கண்காணியுங்கள், சுகாதார ஊழியர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யுங்கள், அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக், தேவையான மருந்து கருவிகளை வைத்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
  • இதற்கிடையே மக்கள் தங்களை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடரவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
  • நீர், மோர், பழச்சாறு அருந்த கேட்டுக்கொள்ளும் அவர்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் உச்சி வெயில் நேரத்தில் பணியாற்றுவதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்கிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்