வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..உடனே முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம்

x

கர்நாடகாவில் காங்கிரஸ் அளித்திருந்த ஐந்து உத்தரவாதங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனாலும் இந்த உத்தரவாதங்கள் தற்போது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் மாநிலத்தின் பல இடங்களில் மின் கட்டணம் செலுத்த மாட்டேன் என பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் நடத்துனரிடம் டிக்கெட் வாங்க மறுத்து வருகின்றனர்.

இதனால் கர்நாடக அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கர்நாடக முதல்வர் சித்திராமையாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், போக்குவரத்து ஊழியர்களிடம் பெண்கள், வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாகவும் எனவே திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்