அந்த மனசு தான் சார் கடவுள்...உதவ முன்வந்த சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ. | தந்தி டிவி செய்தி எதிரொலியாக மாணவிக்கு உதவி...

x

காட்டுமன்னார்கோயில் அருகே, முதுகு தண்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவிக்கு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் உதவ முன்வந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி ப்ரியா. அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் இவர், முதுகுத்தண்டு பிரச்சினையின் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிக்கு செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி தந்தி டிவியில் வெளியான நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், செல்போன் வாயிலாக ஆறுதல் கூறி, மருத்துவ உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்