இலங்கையில் பெரிய ஆன்டனாவுடன் சீன கப்பல்.. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தினால்?

x

யுவான் வாங் என்ற சீன ஆராய்ச்சிக் கப்பல், தெற்கு இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11 அல்லது 12 ல் சென்றடைய உள்ளது. சீனா தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கப்பல், ராணுவ ரீதியான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

470 மாலுமிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை கொண்ட இந்த கப்பலில் பாரபோலிக் வடிவிலான பிரம்மாண்டமான ஆன்டனா ஒன்றும், பல்வேறு வகையான அதி நவீன சென்சார் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளையும், செயற்கைகோள்களின் பாதைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்த கப்பல் நிலை நிறுத்தப் பட்டால், ஒடிசா கடலோரப் பகுதியில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் நடத்தம் ஏவுகணை சோதனைகளை கண்காணிக்க முடியும்.

இந்தியாவின் ஏவுகணை சோதனைகளை துல்லியமாக கண்காணித்து, அதன் மூலம் இந்திய ஏவுகணைகளின் செயல் திறன் மற்றும் எவ்வளவு தூரம் செல்லும் என்பதையும் சீனாவால் கண்டறிய முடியும்.

இந்த கப்பலில் அணு ஆயுதங்களை தாங்கிய ஏவுகணைகள் எதுவும் பொருத்தப்படவில்லை என்பதால் இதை அனுமதித் துள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆய்வுகள் மற்றும் கடற்பயண சோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக சீனா தங்களிடம் கூறியுள்ளதாக, இலங்கை அரசு கூறியுள்ளது.

இந்த கப்பலின் பயணத்தை இந்தியா தீவிரமாக கண் காணி த்து வருகிறது. இதற்கு முன்பு கடைசியாக 2014ல் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்