இந்தியா போட்ட மாஸ்டர் பிளான்.. உளவு பார்க்க ஊடுருவிய சீன கப்பல் - இந்திய பெருங்கடலில் திடீர் பதற்றம்

இந்தியா ஏவுகணை சோதனையை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், சீன உளவுக்கப்பல் இந்திய பெருங்கடலில் இறங்கியிருப்பதாக வெளியாகியது.
x

சமீபத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் யுவான் வாங் 5 உளவு கப்பல் இலங்கையில் நிறுத்தப்பட்டது. இந்திய பாதுகாப்பு கட்டமைப்புகளை இந்த கப்பல் நோட்டமிட வல்லது என பாதுகாப்பு வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது இதனுடைய சகோதரி கப்பலான யுவான் வாங் 4 இந்திய பெருங்கடலில் இறங்கியிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா அதிநவீன NOTAM ஏவுகணை சோதனையை வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மேற்கொள்ளலாம் என தகவல் வெளியான நிலையில் இந்திய பெருங்கடலில் சீன கப்பலின் நகர்வு புருவத்தை உயரச் செய்திருக்கிறது. இந்திய ராணுவத்திற்காக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரிக்கும் ஏவுகணைகள் ஒடிசா கடற்கரையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

NOTAM ஏவுகணை 2 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்திருக்கும் சீனாவின் யுவான் வாங்-4 உளவு கப்பலால் ஏவுகணையின் பாதை, துல்லியம், வேகம் மற்றும் வீச்சு திறனை கண்காணிக்க முடியும் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சீன கப்பல் இந்திய பாதுகாப்பு கட்டமைப்பை நோட்டமிடுவதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இந்திய கடற்படை சீன கப்பல் நகர்வை பல நாட்களாகவே கூர்ந்து கண்காணிப்பதாக பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்