ரத்ததானம் வழங்க கியூவில் நிற்கும் சீனர்கள்...போதாமல் தவிக்கும் மருத்துவமனைகள்...சீனா முழுவதும் உச்சகட்ட பரபரப்பு... | CHINA

x

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகத் துவங்கியுள்ளது. தொற்றுப்பரவல் மற்றும் நீடித்த பனிப்பொழிவு உள்ளிட்ட பல காரணிகளால் வெளிநோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ரத்த வங்கிகள், மருத்துவமனைகளில்

பரவலாக ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து சீனா முழுவதும் பல பகுதிகளில் ரத்த தானம் செய்ய முன்வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் ஆயிரத்து 200 ரத்த தான நன்கொடையாளர்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்