வௌவால் மூலம் உலகை அலறவிட்ட சீனாவின் அடுத்த குறி பன்றி..! உலக நாடுகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

x

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் எஸவ் நகருக்கு அருகே, 26 மாடிகள் கொண்ட பிரம்மாண்டமான அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு, அதில் உலகின் மிக பெரிய பன்றிப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரே சமயத்தில் 6 லட்சத்து 50 ஆயிரம் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. தானியங்கி முறையில் 30 ஆயிரம் உணவு அளிக்கும் மையங்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளது. பன்றிகளின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க, கட்டிடத்தின் வெப்ப அளவை சீராக வைத்திருக்கவும், காற்றை சுத்தீகரிக்கவும் மிக நவீன எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு 10 லட்சம் பன்றிகளை மின்சார கருவி மூலம் கொன்று, பன்றிக்கறி எடுக்கும் வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பன்றிகளின் கழிவுகளில் இருந்து பயோ கேஸ் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இத்தகைய அடுக்குமாடி கட்டிடத்தில் உருவாக்கப்படும் மெகா பண்ணைகளில் நோய்கள் பரவ வாய்ப்பு அதிகம் என்று துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்