சீனாக்கு புதிய செக்...மிரட்டவரும் வாகிர் நீர்மூழ்கி கப்பல் - இதில் இவ்ளோ அம்சங்களா ?

x

உலகின் மிகச்சிறந்த ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல் வாகிர் இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது.

இந்திய கடற்படைக்கு 6 ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கி போர்க்கப்பல் தயாரிப்பதற்காக 2005-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் மும்பை மாஜ்காவ் டாக்யார்ட் நிறுவனம், உள்நாட்டிலேயே நீர்மூழ்கி கப்பல்களை கட்டியுள்ளது. இதில் கல்வாரி, காந்தேரி, கராஞ்ச், வேலா என 4 ஸ்கார்பியன் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது. அந்த வரிசையில் கட்டப்பட்ட வாகிர் கப்பல் சென்சார், தாக்குதல் பரிசோதனையை வெற்றிகரமாக முடிந்ததும் கடற்படையிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கார்பியன் கப்பல்கள், கடலுக்குள் இருந்தபடியும், கடலின் மேற்பரப்புக்கு வந்தும் எதிரிகளின் இலக்கை ஏவுகணை வீசி கண்ணிமைக்கும் நேரத்தில் தவிடுபொடியாக்கும் வல்லமை கொண்டது. விரைவில் வாகிர் ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது


Next Story

மேலும் செய்திகள்