"இலங்கையில் ஆழமாக காலூன்றி வரும் சீனா"... "இந்தியாவுக்கு மிப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்"

x

ஈழ பிரச்சனையும், இந்திய பாதுகாப்பும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதை, டெல்லியில் இருப்பவர்கள் உணர வேண்டும் என உலகத் தமிழர் பேர‌மைப்பின் தலைவர் பழ நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிப் பொருட்கள் தமிழர்களுக்கு சென்றடையவில்லை என்றார். அவை தமிழர்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி வருவது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்