பசிபிக் பெருங்கடலில் விழுந்த சீனாவின் 23 டன் ராக்கெட் - அதிர்ச்சியில் உலக நாடுகள்..!

x

சுமார் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட சீன ராக்கெட் எங்கு விழும் என தெரியாது என்று சீன விஞ்ஞானிகள் கை விரித்திருந்த நிலையில், அது பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான உபகரணங்களை ஏற்றிக் கொண்டு சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பிய லாங் மார்ச் பி ராக்கெட் பூமியின் எந்த பகுதியில் விழும் என தெரியாது என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தெற்கு மத்திய பசிஃபிக் பெருங்கடலில் இன்று அதிகாலை 4.01 மணியளவில் விழுந்துள்ளதை அமெரிக்க விண்வெளி கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்