அமெரிக்காவுக்கு "போர்" எச்சரிக்கை விடுத்தது சீனா.. இந்தியா எந்த பக்கம் நிற்கும்?

x

சீனாவின் அருகே உள்ள சிறிய தீவு நாடான தைவான், 1949 வரை சீனாவின் ஒரு அங்கமாக இருந்தது. 1949ல் சீனாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்ட பின், தைவான் தனி நாடாக பிரிந்து, முதலாளித்துவ ஜனனாயக பாதையில் சென்று, வளர்ந்த நாடாக உருவெடுத்தது. தைவானை கைபற்றி, சீனாவுடன் மீண்டும் இணைக்கப் போவதாக, பல ஆண்டுகளாக சீனா அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து தைவானை பாதுகாக்க, 1950கள் முதல் 1970கள் வரை அமெரிக்க ராணுவம், தைவானில் நிலை நிறுத்தப்பட்டது. அமெரிக்கா சீனா உறவு சீரடைந்த பின், அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் சமீப ஆண்டுகளில், அமெரிக்கா சீனா உறவுகள் மோசமடைதுள்ளதால், தைவானை ஆக்கிரமிக்கப் போவதாக சீனா மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. தைவானிற்கு ஏராள மான ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமானங்களை

அளித்துள்ள அமெரிக்கா, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய, அமெரிக்க போர் கப்பல்களை தைவான் கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா இடையே ஒரு ராணுவ ஒப்பந்தம் 2021ல் உருவானது. ஆஸ்திரேலியாவிற்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அளிக்க இது வகை செய்கிறது. சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் குவாட் கூட்டமைப்பு 2017ல் உருவானது.

ரஷ்யாவின் அச்சுறுத்தல்களில் இருந்து ஐரோப்பிய நாடுகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட நேட்டோ கூட்டமைப்பில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் நேட்டோ போல ஆசிய பசிபிக் பகுதியிலும், ஒரு ராணுவ கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கினால், அது போருக்கு வழி வகுக்கும் என்று சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லி ஷாங்ஃபு கூறியுள்ளார்.சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் லாயிட்ஆஸ்ட்டின் முன்னிலையில் அவர் இதை தெரிவித்தார். அமெரிக்கா, சீனா இடையே போர் மூண்டால், அது உலக அளவில் பெரும் அழிவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

அவரை தொடர்ந்து உரையாற்றிய ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இந்தோ பசிபிக் கடற்பகுதிக்கு இரண்டு போர் கப்பல்களை அடுத்த ஆண்டு ஜெர்மனி அனுப்பும் என்றார். இதனால் தைவான் கடல் பகுதியில் போர் பதற்றம் அதிகரிக்கும் என்று துறை சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்