தீயாய் வேலை பார்த்த சீனா... அமெரிக்காவை சாய்த்த டிராகன் தேசம் - உலகின் நம்பர் 1-ஆக மாறியது..!

x

ஆராய்ச்சித் துறையில் சாதனை படைத்துவந்த அமெரிக்காவை, சீனா பின்னுக்குத் தள்ளியுள்ளது.....


உலக அளவில் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்வதில், முன்னணி நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, முதலிடத்தைப் பெறுவதில் அமெரிக்காதான் முன்னிலையில் இருந்துவந்தது.

அண்மைக்காலமாக, இதை மாற்றியமைக்கும்படியாக சீன ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துவருகின்றனர். ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறையில், சீன விஞ்ஞானிகள் அதிக அளவிலான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும், அமெரிக்கர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளைவிட சீனர்கள் மூன்று மடங்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, உலக அளவில் மேற்கோள் காட்டப்படுகின்ற - முன்னிலையில் உள்ள ஒரு சதவீத ஆராய்ச்சிக் கட்டுரைகளில், சீனா முதலிடத்தில் உள்ளது.

இந்தப் போட்டியில், 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவை சீனா முதல் முறையாக முந்தியது.

2019ஆம் ஆண்டில், அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சீனா 8,422, அமெரிக்கா 7,959, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 6,074 என முன்னிலை இடங்கள் பதிவாகின.

அமெரிக்காவில் உள்ள அறிவியல், தொழில்நுட்பத் துறை முதலீட்டு ஆய்வாளர் கரோலின் வேக்னர், இதுகுறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நேனோ அறிவியல், வேதியியல், போக்குவரத்து ஆகிய துறைகளின் ஆராய்ச்சியில், சீனாதான் முதலிடத்தில் இருக்கிறது என்றும் வேக்னரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்