ஆடல், பாடல், இசை, நாடகம்.. சீனாவின் களைகட்டிய வசந்த விழா

ஆடல், பாடல், இசை, நாடகம்.. சீனாவின் களைகட்டிய வசந்த விழா
Published on

சீனாவில் வசந்த விழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன...

புத்தாண்டு தினமான இந்த வசந்த விழாவானது இன்று தொடங்கி ஒருவார காலம் கொண்டாடப்படும்...

இவ்விழாவின் போது வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவர்...

இந்த ஆண்டு வசந்த விழா நிகழ்வில் ஆடல், பாடல், இசை, நாடகம் என கலைநிகழ்ச்சிகள் களைகட்டியுள்ளன.

சீன ராசிகளில் மொத்தமுள்ள 12 விலங்குகளில் இந்த ஆண்டிற்கான விலங்கு முயல் ஆகும்.

இந்த முயல் புத்தாண்டை கொரோனா கட்டுப்பாடுகளின்றி சீன மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com