101சீனாவில் ஒரே மாதத்தில் 60,000 பேர் கொரோனாவால் பலி... அதிர்ச்சிகர தகவல்கள் வெளியீடு - உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு கோரிக்கை

x

சீனாவில் பூஜ்ஜிய கொரோனா கொள்கைக்கு அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. ஆனால் அதன்பிறகு கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிக்கத் துவங்கியதாக தகவல்கள் வெளியாகின. கொரோனா தரவுகளில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என உலக சுகாதார அமைப்பும் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பால 60 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கொரோனா நிலைமை குறித்த கூடுதல் தகவல்களை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. WHO தலைவர் Tedros Adhanom சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் இயக்குனர் உடனான உரையாடலில் இந்த கோரிக்கையை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்