சீனாவுடன் தொடர்புடைய கடன், சூதாட்ட செயலிகள்... தொடர்ந்து அதிகரிக்கும் முறைகேடு புகார்கள் - மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

x

சீன கடன் செயலிகள் மூலம், கோடிக்கணக்கில் நடந்த முறைகேடு தொடர்பான புகார்கள், தொடர்ந்து பதிவான நிலையில், அந்த கடன் செயலிகளை முடக்கும் நடவடிக்கையை, மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அதன்படி, சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, அவசர கால அடிப்படையில், எலக்ட்ரானிக் துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

மேலும், சூதாட்ட செயலிகளால் ஏராளமானவர்கள் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வரும் சூழலில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்