கடுமையாக பரவிய காட்டுத்தீ! - 4,700 ஹெக்டேர் காடுகள் சாம்பல் - தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

x
  • சிலி தலைநகர் சாண்டியாகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
  • சாண்டியாகோ நகரின் தென்மேற்கே சுமார் 328 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வீடுகள், கட்டடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
  • ஸ்பெயின் நாட்டி ல் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையாக காட்டுத்தீயானது பரவி வருகிறது.
  • அந்நாட்டில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், அஸ்டூரியாஸ் பகுதியில் பரவலாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
  • இதனால் வனப்பகுதிகளுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
  • இந்நிலையில், மனிதர்களால் தான் இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கக் கூடும் என அதிகாரிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
  • இதுவரை சுமார் 4 ஆயிரத்து 700க்கும் அதிக ஹெக்டேர் பரப்பிலான வனங்கள் சாம்பலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்